நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

வியாழன், 19 பிப்ரவரி, 2015

புற்றுநோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை!

உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள்தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது.
பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.
சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது
மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கால் வலியை விரட்டும் நெல்லி ரசம்!

குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்கும் திறமை பெற்றது வெற்றிலை நெல்லி ரசம்.

தேவையான பொருட்கள்
: முழு நெல்லிக்காய் 10, வெற்றிலை 20, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் 4, பூண்டு 6 பல், வால் மிளகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.செய்முறை: நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெறும் சட்டியில் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு, பொடியாக நறுக்கிய பூண்டு,ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு இளம் சிவப்பாக வறுக்கவும். பின்னர், பொடியாக நறுக்கிய"
கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.நன்றாக வதங்கியதும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும். அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம் வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.
இந்த நெல்லி ரசத்தை குடிப்பதன் மூலம் குதிகால் வலியை எளிதில் குறைப்பதோடு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதயநோயாளிகளுக்கும் ஏற்ற உணவாக அமைகிறது. எலும்பு புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது

திங்கள், 19 ஜனவரி, 2015

சிவப்பணுக்களை உருவாக்கும் லைச்சி பழம்!

லைச்சி பழம் நாம் அதிகம் அறியப்படாத பழம். சீனாவை பூர்வீகமாக கொண்ட இந்த பழம் மலேசியா, இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளில் அதிகமாக கிடைக்கிறது. லிச்சி பழம் சிவப்பு நிறத்தில் ஒரு பெரிய விதை போல மூடபட்டு இருக்கும் அதனுள்ளே வெள்ளை நிறத்தில் பழம் உள்ளது.. முட்டை வடிவத்தில் இருக்கும். இது பல ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. லிச்சி பழம் வெப்ப மண்டல பகுதிகளில் காணப்படுகிது.
எதற்காக லிச்சி பழத்தை உடல் நலம் தரும் பழம் என கருதுகிறோம்.

லிச்சி பழத்திலிருந்து கிடைக்கும் கலோரி 76. புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்ஷியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின், நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலை கட்டுப்படுத்தி குடலின் தசைநார்களை சீராக இயங்க வைக்கும். நார்ப்பொருள் 0.5 கிராமும், எலும்பு, பல் பலம் பெற உதவும் கால்சியம் 10 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 35 மிகி, இரும்பு சத்து 0.7 மிகி உள்ளது என்கிறார்கள் உணவுச் சத்து நிபுணர்கள்.

தினமும் ஒரு லிச்சி பழம் சாப்பிட்டு வந்தால் ரத்த உருவாக்கம்
அதிகமாகும். ஏனெனில் சிவப்பணுக்கள் உருவாவதற்கு தேவையான மாங்கனீசு, மெக்னீசியம், தாமிரம், இரும்பு மற்றும் ஃபோலேட் போன்ற அனைத்தையும் வழங்குகிறது. மேலும் வைட்டமின் சி கொண்டுள்ளதால் இரும்பு சத்துகளை உரிஞ்சும் திறன் கொண்டு செயல்படுகிறது. தினமொரு லிச்சி பழத்தை சாப்பிட்டு உடலை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

வியாழன், 25 டிசம்பர், 2014

உள் தொடையில் உள்ள கருமையைப் போக்க சில டிப்ஸ் !!!

ஆண்களே! ‘அந்த இடத்தில்’ அரிப்பு ஏற்பட காரணம் என்னவா இருக்கும்ன்னு தெரிஞ்சுக்கணுமா? பெரும்பாலும் பெண்களுக்கு மற்ற பகுதிகளை விட, அதிக அளவில் கருமையாக இருக்கும் இடங்கள் என்றால், அக்குள், பிறப்புறுப்பு மற்றும் உள் தொடை தான். அதுமட்டுமின்றி, அப்பகுதிகளில் எவ்வித பராமரிப்பும் கொடுக்காததால், அப்பகுதி மிகவும் கருமையாகவே உள்ளது. ஆனால் அவ்விடங்களில போதிய பராமரிப்பு கொடுத்தால், அவற்றையும் மற்ற பகுதிகளைப் போல்
வெள்ளையாக்கலாம். சரி, இப்போது உள் தொடையில் உள்ள கருமையைப் போக்க சில டிப்ஸ்களைப் பார்ப்போமா!!! உள் தொடையில் உள்ள கருமையைப் போக்க எலுமிச்சை சாற்றில், சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, அப்பகுதியில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், நாளடைவில் கருமையாக இருக்கும் இடத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம். நல்லெண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, அதனை கருமையாக உள்ள உள் தொடையில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து, 10 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். இப்படி அன்றாடம் செய்தால் நல்ல மாற்றம் தெரியும். தற்போது கடைகளில் பலவிதமான கிரீம்கள் மற்றும் லோசன்கள் கிடைக்கின்றனர். அவற்றில் எலுமிச்சை மற்றும் மஞ்சள் கலந்த க்ரீம்களை வாங்கி முழங்கை, கால், உள் தொடை ஆகிய இடங்களில் தடவினால், அவை சருமத்தில் வறட்சி ஏற்படுவதை தடுப்பதோடு, கருமையையும் விரைவில் போக்கும். தினமும் குளிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன், 1 டேபிள் ஸ்பூன் பால் பவுடருடன், எலுமிச்சை சாறு, தேன் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, அதனை உள் தொடையில் தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். இதன் மூலமும் நல்ல பலன் கிடைக்கும். உள் தொடையில் உள்ள கருமையைப் போக்க ஆப்பிள் சீடர் வினிகரில் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, நன்கு காய்ந்ததும், குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல மாற்றத்தைப் பார்க்கலாம். சந்தனப் பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, கருமையாக உள்ள இடத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், உள் தொடையில் இருக்கும் கருமை நீங்கி, பொலிவோடும் மென்மையாகவும் இருக்கும்.

காலை உணவை தவிர்க்கக் கூடாது...ஏன்?

நாம் அதிகமாகத் தவிர்க்கும் உணவு காலை உணவு. உண்மையில், அறவே தவிர்க்கக் கூடாததும் காலை உணவுதான். ஏன் என்பதற்கு காரணமான ஐந்து முக்கிய காரணங்கள்.
ஏனெனில், காலை உணவு என்பது விரதத்தை முடிப்பது...
பிரேக்ஃபாஸ்ட் என்ற வார்த்தையைக் கவனியுங்கள். ‘பிரேக்கிங் தி ஃபாஸ்ட்’ என்பதுதான் அதன் அர்த்தம். முதல்நாள் இரவு 9 மணிக்கு சாப்பிட்டிருந்தால் அடுத்த நாள் காலை9 மணிக்கு காலை உணவு சாப்பிடுகிறோம். இடையில் 12 மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருக்கிறோம். இது கிட்டத்தட்ட விரதம் இருப்பது போலத்தான். நாம் தூங்கினாலும், நம் ஆரோக்கியத்துக்காக உடல் உறுப்புகள் உழைத்துக் கொண்டேதான் இருக்கின்றன. அவற்றுக்கு அடுத்த நாளின் தொடக்கத்திலாவது சக்திக்கான உணவு வேண்டும். காலையிலும் சாப்பிடாமல் விட்டுவிட்டால் மதியம் ஒரு மணி வரை இந்த விரதம் நீடிக்கும். பிறகு, ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் உடல் உறுப்புகளுக்கு எப்படி சக்தி கிடைக்கும்? நீங்கள் எப்படி ஆரோக்கியமானவராக இருக்க முடியும்? எனவே, விரதத்தை முடியுங்கள்... காலையில்!
ஏனெனில், காலை உணவு என்பது எரிபொருள் நிரப்புவது...

நாள் ஒன்றுக்கு 1500 முதல் 1800 கலோரி வரை நம் உடலுக்கு சக்தி தேவை. இதில் மூன்றில் ஒரு பங்கு கலோரிகள் காலை உணவிலிருந்தே உங்களுக்குக் கிடைக்க வேண்டும். அப்போதுதான் நாள் முழுவதும் நீங்கள் எனர்ஜியுடன் செயல்படுவதற்கு உங்கள் உடல் உங்களுக்கு உதவி செய்யும். அதனால், எரிபொருளை நிரப்புங்கள்!
ஏனெனில், காலை உணவு என்பது நோய்களை விரட்டுவது...

காலை உணவைத் தவிர்ப்பதற்கான காரணங்களில் ஒன்று பசியின்மை. 9 மணிக்கு வெளியில் கிளம்புகிறவர்களாக இருந்தால் 8 மணிக்குள் குளித்துத் தயாராகிவிடுங்கள். குளித்தவுடன் இயல்பாகவே பசியெடுக்க ஆரம்பித்துவிடும். உங்களுக்கு காலை உணவு உண்பதற்கு நேரமும் கிடைக்கும். இல்லாவிட்டால், 11 மணிக்கு பசி அதிகமாகும். காலை உணவும் சாப்பிட முடியாமல், மதிய உணவும் சாப்பிட முடியாமல் ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனிகளையும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களையும் சாப்பிட வேண்டியிருக்கும். ஏற்கெனவே உணவைத் தவிர்த்திருப்பதால் உடல் சோர்வு, மூளையில் மந்தத் தன்மை, பருமன், சர்க்கரை அளவு ரத்தத்தில் ஏறி இறங்குவது, ரத்தசோகை போன்ற பிரச்னைகள் அதிகமாகும். தவிர உப்பு, கொழுப்பு, இனிப்பு அதிகம் நிறைந்த நொறுக்குத்தீனிகளால்ரத்தக் கொதிப்பு ஏற்படுவது, காலைப் பசியின் காரணமாக மதியம் அதிகமாக சாப்பிட நேர்வது, பட்டினியின் காரணமாக வயிற்றில் அமிலம் அதிகமாக சுரப்பது, அமிலம் அதிகம் சுரப்பதால் அல்சர் குறைபாடு இருந்தால் இன்னும் அதிகமாவது போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். ஆகவே, நோய்களை விரட்டுங்கள்.
ஏனெனில், காலை உணவு என்பது புத்துணர்வைத் தருவது...
காலை உணவின் மகத்துவங்களில் ஒன்று உடல் சோர்வு மற்றும் மனச்சோர்விடம் இருந்து நம்மைத் தற்காப்பது. நம் உடலுக்குத் தொடர்ச்சியாக தேவைப்படுகிற குளுக்கோஸ்தான் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், குறிப்பாக நம் மூளையின் செயல்திறனுக்கும் அதிகம் தேவைப்படுகிறது. இது காலை உணவின் மூலமே அதிகம் கிடைக்கிறது. இதன்மூலம் மூளையில் இருக்கும் நியூரோ டிரான்ஸ்மீட்டர்கள் சிறப்பாகச் செயல்பட்டு, நினைவுத்திறனை அதிகப் படுத்தி, உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. குறிப்பாக, குழந்தைகளுக்கு காலை உணவு மிகமிக அவசியம். அவசரமாக, ஏதாவது ஒன்றை டிபன் பாக்ஸில் அடைத்துத் தந்தால் பள்ளியில் மந்தமாகவே இருப்பார்கள். படிப்பதிலும் பின்தங்குவார்கள். காலை உணவைத் தவிர்க்கும் குழந்தைகளுக்கு நீரிழிவு தாக்கும் அபாயம் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே, ஆரோக்கியத்தையும் புத்துணர்வையும் பெற்றுக் கொள்ளுங்கள்.
ஏனெனில், காலை உணவு என்பது உங்களை ராஜாவாக மாற்றுவது...

‘காலையில் ராஜா மாதிரி சாப்பிட வேண்டும், மதியம் மந்திரி மாதிரி சாப்பிட வேண்டும், இரவில் சிப்பாய் மாதிரி சாப்பிட வேண்டும்’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். காலை உணவின் முக்கியத்துவத்தைமருத்துவரீதியாக உணர்ந்து சொல்லப்பட்ட பொன்மொழி இது. ராஜா மாதிரி என்றால் அதிகம் சாப்பிட வேண்டும் என்று அர்த்தம் அல்ல. மாவுச்சத்து, நார்ச்சத்து, புரதம் என எல்லாம் கலந்த சரிவிகித உணவாக சாப்பிட வேண்டும் என்பதே இதன் அர்த்தம். நான்கு இட்லி சாப்பிட்டாலே உங்களுக்குத் தேவையான சரிவிகித உணவு காலையில்கிடைத்துவிடும். இட்லியில் மாவுச்சத்தும், சாம்பாரில் காய்கறிகளும் பருப்பும் இருப்பதால் நார்ச்சத்தும் புரதமும் கிடைத்து விடும். ஆகவே, ராஜாவாகி விடுங்கள்!

செவ்வாய், 16 டிசம்பர், 2014

காரமான தக்காளி மீன் குழம்பு

இறுதியில் எப்போதும் சிக்கன், மட்டன் செய்து சாப்பிட்டு போர் அடித்திருந்தால், இந்த வார இறுதியில் தக்காளி மீன் குழம்பு செய்து சுவைத்துப் பாருங்கள். இந்த மீன் குழம்பானது மிகவும் சுவையாகவும், காரமாகவும் இருக்கும். மேலும் பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம். அந்த அளவில் இந்த தக்காளி மீன் குழம்பானது ஈஸியாக இருக்கும்.
சரி, இப்போது அந்த காரமான தக்காளி மீன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
 
தேவையான பொருட்கள்:மீன் - 6-7 துண்டுகள்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 6 (அரைத்தது)வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)பூண்டு - 6-8 பற்கள்
கறிவேப்பிலை - சிறிது
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
புளி - 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன
செய்முறை:முதலில் மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு அகலமான மற்றும் தட்டையான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கறிவேப்பிலையை சேர்த்து வறுத்து, பின் அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வறுத்து, பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கி, பின் சீரகப் பொடி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து, 8-10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
அடுத்து, அதில் மிளகாய் தூள் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் அதின் மீன் துண்டுகளை சேர்த்து, குறைவான தீயில் மூடி வைத்து 10 நிமிடம் மீனை வேக வைக்க வேண்டும்.
மீனானது நன்கு வெந்ததும், அதில் புளிச்சாறு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், காரமான தக்காளி மீன் குழம்பு ரெடி!!!

திங்கள், 15 டிசம்பர், 2014

பானை போன்ற தொப்பையைக் குறைக்க !!!

நீங்கள் உடல் எடையால் அதிகம் அவஸ்தைப்படுகிறீர்களா? இதற்காக நிறைய முயற்சிகளை எடுத்துள்ளீர்களா? இருப்பினும் எவ்வித பலனும் கிடைத்ததில்லையா? கவலையை விடுங்கள். ஏனெனில் எப்போதுமே ஒன்றைப் பெற நினைக்கும் போது கடுமையாக செயல்படுவதை விட, ஸ்மார்ட்டாக செயல்பட்டால், நிச்சயம் அதனை விரைவில் பெற முடியும்.
கொழுப்பை விரைவில் குறைக்க உதவும் 10 நிமிட உடற்பயிற்சிகள்!!!எனவே உடல் எடையைக் குறைக்க கடுமையாக முயற்சிக்காமல், சிம்பிளான வழிகளைத் தேடுங்கள். உங்களால் தினமும் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய முடியவில்லையா? பரவாயில்லை. மாறாக, கடைகளில் விற்கப்படும் உணவுகளை வாங்கி சாப்பிடுவதைத் தவிர்த்து, உடல் எடையைக் குறைக்க உதவும் அதே சமயம் விலைக் குறைவிலும் கிடைக்கும் உணவுப் பொருட்களை அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள்.
7 நாட்களில் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரிய இத ஃபாலோ பண்ணுங்க...அதற்கு அந்த உணவுகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். எனவே தமிழ் போல்ட் ஸ்கை உடல் எடையைக் குறைக்க உதவும் விலைக் குறைவில் கிடைக்கும் அவற்றை தவறாமல் உங்கள் உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலனை விரைவில் பெறலாம்.
 சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இத்தகைய தானியங்களை நம் முன்னோர்கள் அதிகம் எடுத்து வந்ததால் தான், அவர்கள் உடல் பருமன் பிரச்சனையால் அவஸ்தைப்படாமல் இருந்தார்கள். எனவே இவற்றை முடிந்தால் அன்றாட உணவில் சேர்த்து உடல் எடையை குறையுங்கள்.
  பாசிப்பருப்பில் கலோரி குறைவாக இருப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்போர், தினமும் உணவில் இதனை சேர்த்து வருவது நல்லது. மேலும் இதனால் உடலுக்கு வேண்டிய வைட்டமின்களான ஏ, ஈ மற்றும் சி அதிகம் கிடைக்கும்.
மஞ்சள்
அனைத்து வீடுகளிலும் இருக்கும் ஒரு பொருள் தான் மஞ்சள். இந்த மஞ்சள் கூட உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்கும். அதற்கு தினடும் ஒரு டம்ளர் பாலில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து பருக வேண்டும்.
 மோரில் 2.2 கிராம் கொழுப்புக்களும், 99 கலோரிகளும் தான் உள்ளது. எனவே இவற்றை அன்றாடம் பருகி வந்தால், உடலில் கொழுப்புக்கள் சேர்வது குறைவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.  உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்களுக்கு ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த ஒரு பொருள் தான் தேன். இத்தகைய தேனை சர்க்கரைக்கு பதிலாக சேர்த்து வந்தால் தொப்பை குறைவதோடு, சருமமும் பொலிவோடு இருக்கும்.  முட்டைக்கோஸில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இவற்றை உடல் பருமன் உள்ளவர்கள் உட்கொண்டு வந்தால், தொப்பை வளர்வது குறையும். அதுமட்டுமின்றி, அன்றாட உணவில் சேர்த்து வர தொப்பையும் குறைய ஆரம்பிக்கும். 
 
சமைக்கும் போது உணவில் வெஜிடேபிள் ஆயிலை சேர்ப்பதற்கு பதிலாக, கடுகு எண்ணெயை சேர்த்து வந்தால், உடலில் செரிமான மண்டலம் சுத்தமாகி கொழுப்புக்கள் வெளியேற ஆரம்பிக்கும். இதனால் உடல் எடையும் குறையும். பூண்டில் சல்பர் அதிகம் இருப்பதால், அவை கொழுப்புக்களை உடையச் செய்து, உடலில் சேர்வதைத் தடுக்கும். அதற்கு ஒவ்வொரு முறை உணவு உட்கொண்ட பின்னரும் ஒரு பூண்டை சாப்பிட வேண்டும். இப்படி பச்சையாக சாப்பிட்டால், இதன் பலன் விரைவில் தெரியும். 
ஓட்ஸில் கலோரிகள் குறைவாக இருப்பது மட்டுமின்றி, உடலுக்கு ஆற்றலையும் தருவதால், இதனை அன்றாடம் காலை உணவாக எடுத்து வருவது நல்லது. விலைக் குறைவில் கிடைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் தக்காளி. இத்தகைய தக்காளியில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன், இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது. முட்டையின் வெள்ளைக் கருவில் புரோட்டீன் அதிகம் உள்ளது. எனவே இதனை உட்கொண்டு வந்தால், அவை தொப்பையைக் குறைக்கும். ஆகவே எடையைக் குறைக்க விரும்பும் முட்டை பிரியர்கள், முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். 
 
அனைவரும் தூக்கி எறியும் கறிவேப்பிலையை பச்சையாக தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் மற்றும் டாக்ஸின்கள் வெளியேறிவிடும்.  மசாலா பொருட்களில் ஒன்றான ஏலக்காய் செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது. மேலும் ஏலக்காய் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்கும்.புதினா
 புதினா உடலில் தங்கியுள்ள தேவையற்ற நச்சுக்களை சுத்தம் செய்ய உதவுவதோடு, உடலை அமைதிப்படுத்தும். அதுமட்டுமின்றி, புதினா வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.