நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

புதன், 29 அக்டோபர், 2014

அருகம்புல்லின் அருமை !!!

அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை பெய்தால்கூட உடனே துளிர்விடும். அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் அருகம்புல்லை உதாரணமாகச் சொல்லி வாழ்ந்ததைப் பார்க்கும்போதே அதன் மகத்துவம் நமக்குத் தெரியவரும்.

*
அருகம்புல்லின் கணுக்களை நீக்கிவிட்டு 10 கிராம் அளவு எடுத்து, அதனுடன் வெண்மிளகு 10 சேர்த்து 4 டம்ளர் நீர்விட்டு காய்ச்சி, பாதியாக வற்றியதும், அதில் சிறிதளவு பசு வெண்ணெய் சேர்த்து குடித்துவர, மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் வெப்பம், நீர் கடுப்பு, மூலக்கடுப்பு, வெள்ளைப்படுதல் போன்றவைக் குணமாகும்.

*
தீராத வயிற்றுவலிக்கு அருகம்புல்லுடன் வேப்பிலையை சமஅளவு எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி 100 மில்லி அளவு குடித்துவர குணமாகும்.

*
அருகம்புல்லுடன் மாதுளை இலையை சேர்த்து கஷாயமாக்கி காலை, மாலை இரண்டு வேளையும் 100 மில்லி அளவு குடித்துவர பெண்களுக்கு மாதவிலக்கின்போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு கட்டுப்படும்.

*
வெட்டுக்காயம் ஏற்பட்டால் உடனே அருகம்புல்லுடன் அரிவாள் மூக்கு பச்சிலையை சேர்த்து அரைத்து வைத்துக்கட்ட ரத்தம் வடிவது உடனே நிற்பதுடன், காயமும் வெகுவிரைவில் ஆறிவிடும். அருகம்புல்லுடன் மஞ்சளும், சுண்ணாம்பும் சேர்த்து அரைத்து நகச்சுற்று உள்ள இடத்தில் பூசிவர வலியும், வீக்கமும் குறையும்.




*
ஒரு பிடி அருகம்புல், மிளகு-10, சீரகம் சிறிதளவு சேர்த்து அரைத்து பாலில் கலந்து குடிக்க, உடலில் சேர்ந்துள்ள மருந்துகளின் நஞ்சினை அது போக்கிவிடும். அருகம்புல் வேர், ஆவாரம்பூ இவை இரண்டையும் நிழலில் உலர்த்தி இடித்து சலித்து பொடியாக்கி கொள்ளவும். இதில் 2 கிராம் அளவு எடுத்து, அதை நெய்யுடன் கலந்து சாப்பிட மூல நோய் குணமாகும்.

*
அருகம்புல் வேரையும், அகத்தி வேரையும் இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, காலையில் அதனை காய்ச்சி வடிகட்டி குடித்துவர நீர் எரிச்சல், ஆண் குறி எரிச்சல் குணமாகும்.

*
அருகம்புல் 2 பங்கு, கீழாநெல்லி ஒரு பங்கு சேர்த்து அரைத்து, அதை தயிரில் கலந்து குடிக்க சிறுநீர் எரிச்சல், சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியாகுதல், உடல் வறட்சி போன்றவை குணமாகும். உடல் வெப்பம் தணியும். அருகம்புல்லை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் பால், சர்க்கரை சேர்த்து குடித்துவர சிறுநீர் சம்பந்தமான நோய்கள் நீங்கிவிடும். சிறுநீர்ப்பை பலப்படும்.

*
அருகம்புல்லுடன் வெண்தாமரை பூவிதழ்களை சேர்த்து கஷாயமாக்கி தினமும் இருவேளை குடித்துவர இதய பலவீனம் நீங்கி, இதயமும், ரத்தக் குழாய்களும் உறுதிபெறும்.

*
அருகம்புல் வேரை நிழலில் உலர்த்தி பொடியாக்கி நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சிக் கொள்ளவும். இதனை உடலில் தேய்த்து குளித்துவர எல்லாவித தோல் நோய்களும் குணமாகும். அதை, தலையில் தேய்த்து குளிக்க பொடுகுத்தொல்லை நீங்கும். உடல் குளிர்ச்சியாகும்.

*
அருகம்புல் சாற்றுடன் சிறிதளவு பன்னீர், பப்பாளிப் பழம் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி, உலர்ந்தவுடன் கழுவிவர வெயிலால் ஏற்பட்ட கருமை அகன்று முகம் பளபளப்பாகும். அருகம்புல்லை நீர்விட்டு அரைத்து வடிகட்டி, அதனுடன் வெல்லம் தேவையான அளவு சேர்த்து பருகிவர சிறு நீரக நோய்கள் குணமாகுவதுடன், உடலும், முகமும் அழகு பெறும்.

*
நரம்பு தளர்ச்சியும், உடல் தளர்ச்சியும் நீங்கும். மலச்சிக்கல், தூக்கமின்மை குணமாகும். வயிற்றின் அமிலத் தன்மை குறையும். உடலில் தேங்கியுள்ள கழிவுகள், விஷத்தன்மை வெளியேறும். நீரிழிவு, தொழுநோய், கரப்பான், சொறி, சிரங்கு ஆகியவை குணமாகும்.

*
பல் சம்பந்தப்பட்ட நோய்கள், பல் ஈறில் இருந்து ரத்தம் கசிந்து, வாய் நாற்றம் போன்றவை விலகும். உடலுக்கு அழகும், வசீகரமும் தரும். உடல் வெப்பம் தணியும். இந்த பலன்களை நீங்களும் பெறவேண்டுமா? தினமும் டீ, காபிக்கு பதிலாக அருகம்புல் சாற்றுடன் தண்ணீர் அல்லது தேன் அல்லது இளநீர் கலந்து சாப்பிடுங்கள்.ஒரே ஒரு "நிபந்தனை" தினமும் காலையில் வெறும் வயிற்றில் தான் இதை குடிக்க வேண்டும். அப்போது தான் பலன் உண்டு

திங்கள், 13 அக்டோபர், 2014

தோல் நோய்களுக்கு சிறந்தது கோவைக்காய் !!!



காடுகளிலும், புதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும் தானாக வளருவது தான் கோவைக்காய். கோவைக்காய் கொடி வகையை சேர்ந்தது. கோவைக்காய் முழுவதும் மருத்துவகுணம் கொண்டது. காய், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை. வெள்ளரிக்காய் குடும்பத்தை சேர்ந்தது. எளிமையான கோவக்காய் இந்தியாவில் எங்கும் கிடைக்கும்.

கோவைக்காயின் கனிகள் செந்நிறமுடையவை. இவற்றை மென்றால் நாக்கில் உள்ள புண்கள் ஆறும். இலைகள், தண்டு, வேர் ஆகிய பாகங்களில் இருந்து பிழிந்து எடுக்கப்பட்ட சாறு உலோகப் பொருட்களோடு கலந்து நீரிழிவு நோய், வீங்கிய சுரப்பிகள், தோல்நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்த உதவும்.
நீரிழிவை கட்டுப்படுத்தும்
கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படுவதில்லை.
பல வருடங்களுக்கு முன்பே, அமெரிக்க ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பள்ளியில் நடத்திய ஆய்வில் கோவைக்காய் நீரிழிவு வியாதியை குறைக்கும் குணமுடையது என்பது சொல்லப்பட்டது. நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்று பெங்களூரில் நடத்திய ஆராய்ச்சியிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.
வாய்ப்புண் குணமாகும்
கோவைக்காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகுப்பொடி, சீரகப்பொடி, இஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து விட்டால் அவ்வளவுதான் கோவைக்காய் பச்சடி தயார். இதனை வாரம் இரண்டு நாள் பகல் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும். பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும். வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.
தோல் நோய்களை குணமாக்கும்
இலை மற்றும் தண்டு &கபத்தை வெளியேற்றும். வலி குறைக்கும். இலை, தண்டு, கஷாயம் மார்புச்சளி, சுவாசக்குழாய் அடைப்பு இவற்றிற்கு நல்ல மருந்தாகும். இலைகளை வெண்ணெயுடன் கலந்து புண்கள், பிற தோல்நோய்களை குணப்படுத்த உதவும்.
கோவைப்பழம் கபத்தை உண்டாக்கும். சீக்கிரத்தில் ஜீரணமாகாது. ஆனால் மூச்சு இரைத்தல், வாந்தி, வாய்வு ரத்த சோகை, பித்தம், காமாலை முதலான பிரச்சினைகளை குணப்படுத்தும். கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும்.
வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும்
கோவைக்காய் பித்தம், ரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் நல்ல மருந்தாகும். கோவை இலைச் சாறு, பித்தம், ஷயம், மூல நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படும். கரம் மசாலா அல்லது உஷ்ணத்தைத் தரும் மருந்துகள் கோவைக்காயால் ஏற்படும் தீமைகளுக்கு நல்ல மாற்றாகும்.
கோவைக்காயை மலிவான விலைக்கு கிடைக்கும் .கோவைக்காய் வாங்கி சமைத்து உண்டால் அனைத்து நோய்களையும் குணப்படுத்தி விடலாம்

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

சீத்தாப்பழம்

ஒவ்வொரு காலத்திலும் சந்தையில் பல வகையான பழங்கள் வந்த வண்ணம் இருக்கும். அப்படி தற்போது நாம் பார்ப்பது தான் கூடையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சீத்தாப்பழங்கள். அனைத்து இடங்களிலும் காணப்படும் இந்த சதைப்பற்றுள்ள பழம் எங்கும் கொட்டிக் கிடக்கும். இதில் சிறப்பு என்னவென்றால் இது மிகவும் ஆரோக்கியமானதாகும்.
வைட்டமின் சி போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வளமையாக உள்ள பழம் தான் சீத்தாப்பழம். இவ்வகை ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை நீக்கும். இதுப்போக உங்களை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்ள தேவையான அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களான கால்சியம், மெக்னீஷியம், இரும்பு, நியாசின் மற்றும் பொட்டாசியமும் இதில் அடங்கியுள்ளது.
பலருக்கு இந்த சதைப்பற்றுள்ள பழத்தில் மீது நாட்டம் இருப்பதில்லை. ஆனால் அதன் முக்கியத்துவம் மற்றும் உடல்நல பயன்கள் பற்றி தெரிந்தால் அதனை ஒவ்வொரு சீசனிலும் கண்டிப்பாக வாங்கி சாப்பிடுவீர்கள். வேகமான உடல் எடை குறைப்பிற்கு சீத்தாப்பழம் உதவுகிறது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். அதனால் அதனை உடல் எடை குறைப்பு பழமாக கூட பயன்படுத்தலாம். இருப்பினும் இந்த சுவைமிக்க பழத்தில் உள்ள ஒரே பிரச்சனை, இது உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும். அதனால் மூச்சுத்திணறல் உள்ளவர்களுக்கு இது உதவாது.
இதோ, சீத்தாப்பழத்தின் சில உடல் நல பயன்கள். நம் உடல் நலத்திற்கு இது எப்படி உதவுகிறது என்பதை விரிவாக பார்க்கலாமா?
உடல் எடையை குறைக்க...உடல் எடையை அதிகரிக்க வேண்டுமானால், அதற்கு சீத்தாப்பழம் உதவுகிறது. சீத்தாப்பழம் ஜூஸ் செய்வதற்கு, கொஞ்சம் தேனையும் சீத்தாப்பழத்தையும் பாலில் கலந்து தொடர்ந்து குடியுங்கள்.கர்ப்ப காலத்தின் போது...சிசுவின் மூளை, நரம்பியல் அமைப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு ஆகியவற்றின் வளர்ச்சிக்கு சீத்தாப்பழம் உதவுகிறது. கருச்சிதைவு ஏற்படாமல் இருக்கவும் இந்த பழம் உதவுகிறது.
ஆஸ்துமா நோயாளிகளுக்கு...சீத்தாப்பழத்தில் வைட்டமின் பி6 வளமையாக உள்ளது. இந்த வைட்டமினால் மூச்சுக்குழாய் அழற்சி குறைந்து ஆஸ்துமா ஏற்படுவதும் தடுக்கப்படும்.
மாரடைப்பசீத்தாப்பழத்தில் உள்ள மெக்னீசியம், நமக்கு உடல்நல பயனை அளிக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படாமல் நம்மை அது பாதுகாக்கும்.
செரிமானத்திற்கு நல்லதசீத்தாப்பழத்தில் தாமிரமும், டையட்டரி நார்ச்சத்தும் வளமையாக உள்ளதால், உண்ணுவதற்கு ஆரோக்கியமான பழமாக இது திகழ்கிறது. தாமிரம் இருப்பதால் அது செரிமானத்திற்கு உதவிடும். கூடுதலாக குடல் இயக்கம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளில் இருந்தும் அது உங்களை காக்கும்.
சர்க்கரை நோய்க்கு சிறந்த பழமசீத்தாப்பழத்தில் டையட்டரி நார்ச்சத்து அளவுக்கு அதிகமாக இருப்பதால், சர்க்கரை உறிஞ்சப்படும் அளவு குறையும். இதனால் டைப்-2 சர்க்கரை நோய் உருவாகும் அபாயம் குறையும்.இதில் 16.5% சர்க்கரை உள்ளது. கொழுத்த சதை உடையவர்கள் இப்பழத்தை சாப்பிட கூடாது
இரத்த அழுத்தத்திற்கசீத்தாப்பழத்தில் உள்ள சிறந்த உடல்நல பயன் - அதிலுள்ள வளமையான பொட்டாசியம் மற்றும் மெக்னீஷியம். இந்த இரண்டுமே உங்கள் உடலில் உள்ள இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.
கொலஸ்ட்ரால் அளவுகளசீத்தாப்பழத்தில் நியாசின் மற்றும் டையட்டரி நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. இவைகளால் கொலஸ்ட்ரால் அளவுகள் குறையும்.
உங்களுக்கு இரத்த சோகையா?சீத்தாப்பழத்தில் இரும்புச்சத்து வளமையாக உள்ளதால் இரத்த சோகைக்கும் அது சிகிச்சையளிக்கும்.
வாய் ஆரோக்கியமசீத்தாப்பழம் பற்களுக்கு மிகுந்த பயன்களை அளிக்கிறது. பல் மற்றும் ஈறு வலிக்கு எதிராக சீத்தாப்பழத்தின் தோல் உதவுகிறது.
கண்களை பார்த்துக் கொள்ளுங்களசீத்தாப்பழத்தில் ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் சி அடங்கியுள்ளது. இவை இரண்டுமே உங்கள் கண்களுக்கு நல்லதாகும். ப்ரீ ராடிக்கல்களை அழிக்க இது உதவுவதால், நல்ல கண் பார்வையை பராமரிக்க இது உதவிடும்.


 கீல்வாதத்தை தடுக்குமசீத்தாப்பழத்தில் மெக்னீசியம் உள்ளதால், அது உடலில் உள்ள நீரின் அளவை சரிசமமாக்கும். இது சீத்தாப்பழத்தின் முக்கியமான உடல்நல பயனாகும். இதன் காரணமாக மூட்டில் இருக்கும் அமிலங்கள் வெளியேற்றப்படும். இதனால் கீல்வாதம் வராமல் தடுக்கப்படும்.
 காலை குமட்டலை தடுக்குமகர்ப்பிணி பெண்களுக்கு இது மிகவும் நல்லதாகும். அதே போல் பிரசவத்திற்கு பின்பு உடல் எடையை குறைக்கவும் இது உதவும். முக்கியமாக, காலையில் ஏற்படும் குமட்டலை இது நீக்கும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டல், உணர்வின்மை, பசி, மனநிலையில் ஏற்ற இறக்கம் போன்றவைகளுக்கு எதிராக போராடும்.
 தோல் புற்றுநோயை அண்ட விடாதசீத்தாப்பழத்தில் உள்ள அசிடோஜெனின், தோல் புற்றுநோய்க்கு அறிகுறியான சரும சிதைவை நீக்கும். இதனால் சரும புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

புதன், 1 அக்டோபர், 2014

மாதவிடாய் பிரச்சினையா? மனதை தளரவிடாதீர்கள் !

பெண்களின் மன உளைச்சலை அதிகரிப்பதில் மாதவிடாய்க்கு முக்கிய பங்குண்டு. சரியான நேரத்தில் ரெகுலரான சுழற்சியாக இருந்தால் பிரச்சினையில்லை. ஆனால் முறையற்ற மாதவிடாய் என்றால் சிக்கல்தான். சரியான உணவுபழக்கமின்மை, மன அழுத்தம், உடல்நலக் கோளாறு, மாத்திரை உட்கொள்வது போன்றவைகளினாலும் மாதவிலக்கு சுழற்சியில் சிக்கல் ஏற்படும். எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட பாட்டி வைத்தியத்தை பின்பற்றி பாருங்களேன்.

உடல் உஷ்ணம் அதிகமாகும்

மாதவிடாய் சிக்கல் உள்ளவர்கள் பப்பாளிப்பழம், திராட்சை, அத்திப்பழம் ஆகியவற்றை சாப்பிடலாம். இது உடலில் உஷ்ணத்தை அதிகரிப்பதோடு மாதவிடாய் சுழற்சியை ரெகுலராக்கும்.
எள் மிட்டாய்எள் மிகச்சிறந்த மருந்தாகும். பீரியட்ஸ் பிரச்சினை உள்ளவர்கள் எள்ளில் செய்த உணவுகள், எள் மிட்டாய் போன்றவைகளை சாப்பிடலாம்.
மூச்சுப் பயிற்சி
மாதவிடாய் சிக்கல் உள்ளவர்கள் மூச்சுப் பயிற்சி மேற்கொண்டால் மன அழுத்தம் நீங்கி குறிப்பிட்ட சுழற்றிசியில் மாதவிடாய் வரும்.
மாதவிடாய் சிக்கல் தீர



பெருந்துத்தி இலை - 5 எடுத்து, அதோட மிளகு 5 சேர்த்து காலையில வெறும் வயிற்றில் மென்று சாப்பிடவேண்டும். மூன்று முதல் ஐந்துநாள் சாப்பிட ஒழுங்கான மாதவிடாய் வரும்.
இதற்கு மாவிலிங்கப்பட்டையும் நல்ல மருந்து தான். பட்டையை மையா அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து காலையில வெறும் வயிற்றில் சாப்பிட தாமதமான மாதவிடாய் தடையில்லாம வரும்.
சதக்குப்பை 50 கிராம் எடுத்து பொன்வறுவலா வறுத்து பொடியாக்கி, 3 பாகமாக்கி வைத்துக்கொள்ளவேண்டும். ஒரு பாகத்தை இரண்டாக பிரித்து, காலை, மாலை சாப்பிடவேண்டும். கூடவே, பனைவெல்லம் கொஞ்சம் சேர்த்துக்கணும். இப்பிடி மூணுநாள் சாப்பிட்டாலே வராத மாதவிடாய் சிக்கல் தீரும்.
கருஞ்சீரகம் 25 கிராம் எடுத்து பொன் வறுவலா வறுத்து பொடியாக்கி, பனைவெல்லம் சேர்த்து காலை, மாலை சாப்பிட மாதவிடாய்க் கோளாறு தீரும்.
கல்யாணமுருங்கை இலைகல்யாணமுருங்கை மாதவிடாய்க் கோளாறுக்கு கைகண்ட மருந்து. கல்யாணமுருங்கை இலைச்சாறு 10 மில்லி எடுத்து, காலையில வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா, மாசக்கணக்குல வராத மாதவிடாய் வரும்.
வல்லாரை இலை சூரணம் கால் ஸ்பூன் எடுத்து, நெய் விட்டு கலந்து சாப்பிட வேண்டும். இதனால் மாதக்கணக்கில் வராத மாதவிடாய் ஒழுங்கா வரும்.

புதன், 10 செப்டம்பர், 2014

வேப்பிலையின் மருத்துவ குணங்கள்

வேப்பிலையை பச்சையாகவும் வேக வைத்தும் அல்லது கசாயம் செய்தும் சாப்பிடடு வந்தால் தீராத நோய் அனைத்தும் தீர்ந்து விடும்.
*
வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் புரதச் சத்து, 10 விதமான அமினோ அமிலங்கள் உள்ளன.
*
வேப்பிலையை நம்முடைய முன்னோர்கள் பலவிதமான ஆயுர்வேத சித்த மருந்துகளில் உபயோகப்படுத்தியுள்ளனர். வேப்பிலை சாறில் தொழுநோய், வயிற்றுப் புழுக்கள், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாவதை அறிந்து இந்த நோய்களுக்கு உபயோகப் படுத்தியுள்ளனர்.*
நாள்பட்ட தோல் வியாதிகளை எந்த விதமான பக்க விளைவுகளும் இன்றி குணப்படுத்தக் கூடிய ஒரு அற்புதம் வேப்பிலைக்கு உண்டு. சோரியாசிஸ், சாதாரண சிரங்கு, நமைச்சல், புழுவெட்டு நோய், மருக்கள் முதலியவை வேப்பிலையால் குணமாகக் கூடிய சரும நோய்கள்.*
வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் முகப்பரு மறைந்துவிடும்.*
புத்தம் புதிதாக பறிக்கப்பட்ட இலைகளை பயன்படுத்த வேண்டும்.*
வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சுண்டக் காய்ச்சி, அதனுடைய அடர்த்தி அதிகமான நிலையில் உபயோகிப்பது.*
வேப்பிலையை சாறு எடுத்து உபயோகிப்பது.*
வேப்பிலையை அப்படியே அரைத்து சரும வியாதிகள் மேல் பூசலாம்.*
சரும வியாதி உள்ளவர்கள் வெந்நீரில் வேப்பிலை போட்டு கொதிக்கவைத்து அந்த நீரில் குளித்து வரலாம்.*
சின்னம்மை, தட்டம்மை போன்ற அம்மை நோய்களுக்கு கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்.*
வேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.*
வேப்பிலையை காலையில் டீயுடன் சேர்த்து அருந்தினால் சாதாரண சளி இருமல் குறையும்.

*
வேப்பிலையை அரைத்து வீக்கம் உள்ள இடங்கள், மூட்டுகள், வாத நோய் கண்ட இடங்களில் பூசலாம். முதுகுத்தண்டு வலி, தசைப்பிடிப்பு போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாகும்.*
விவசாயத் துறையில் பூச்சிக் கொல்லியாகவும், கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள முக்கிய வேதிப் பொருள் தற்போது நாம் உபயோகிக்கும உரங்களில் சேர்க்கப்படுகிறது.*
அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அழகுக்காக உபயோகப்படுத்தும் கிரீம்கள், லோஷன்கள், சோப்பு மற்றும் கூந்தல் எண்ணெய்களில் வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது.*
சூழ்நிலைக்கேற்ப உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது.*
ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மை வேப்பிலைச்சாறுக்கு உண்டு.*
வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை மற்றும் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை மட்டுப்படுத்தும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.*
மலேரியக் காய்ச்சலுக்கு குளோரோக்குவின் என்ற மருந்து கொடுக்கப்படும். இந்த மருந்துக்கு கட்டுப்படாமல் இருக்கும் காய்ச்சலை வேப்பிலை கொடுத்து கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.*
காளான் நோய்களான டிரைக்கோபைட்டா மற்றும் பிற காளான் நோய்களையும் வேப்பிலையைக் கொண்டு தீர்க்க முடியும்.*
பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பண்பு வேப்பிலைக்கு உண்டு. கிராம் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.*
வைரஸ் நோய்களை எதிர்க்கும் சக்தி வேப்பிலைக்கு உண்டு. இதனை அம்மை நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்தாக நம் முன்னோர் காலத்திலிருந்து பின்பற்றப் படுகிறது.*
புற்றுநோய் எதிர்ப்பு தன்மை வேப்பிலைக்கு உண்டு. இதனால் புற்றுநோய் வளர்ச்சியைத் தடைப்படுத்தக்கூடிய மருந்துகளில் வேப்பிலை பெரும்பங்கு வகிக்கிறது.