நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

சீத்தாப்பழம்

ஒவ்வொரு காலத்திலும் சந்தையில் பல வகையான பழங்கள் வந்த வண்ணம் இருக்கும். அப்படி தற்போது நாம் பார்ப்பது தான் கூடையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சீத்தாப்பழங்கள். அனைத்து இடங்களிலும் காணப்படும் இந்த சதைப்பற்றுள்ள பழம் எங்கும் கொட்டிக் கிடக்கும். இதில் சிறப்பு என்னவென்றால் இது மிகவும் ஆரோக்கியமானதாகும்.
வைட்டமின் சி போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வளமையாக உள்ள பழம் தான் சீத்தாப்பழம். இவ்வகை ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை நீக்கும். இதுப்போக உங்களை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்ள தேவையான அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களான கால்சியம், மெக்னீஷியம், இரும்பு, நியாசின் மற்றும் பொட்டாசியமும் இதில் அடங்கியுள்ளது.
பலருக்கு இந்த சதைப்பற்றுள்ள பழத்தில் மீது நாட்டம் இருப்பதில்லை. ஆனால் அதன் முக்கியத்துவம் மற்றும் உடல்நல பயன்கள் பற்றி தெரிந்தால் அதனை ஒவ்வொரு சீசனிலும் கண்டிப்பாக வாங்கி சாப்பிடுவீர்கள். வேகமான உடல் எடை குறைப்பிற்கு சீத்தாப்பழம் உதவுகிறது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். அதனால் அதனை உடல் எடை குறைப்பு பழமாக கூட பயன்படுத்தலாம். இருப்பினும் இந்த சுவைமிக்க பழத்தில் உள்ள ஒரே பிரச்சனை, இது உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும். அதனால் மூச்சுத்திணறல் உள்ளவர்களுக்கு இது உதவாது.
இதோ, சீத்தாப்பழத்தின் சில உடல் நல பயன்கள். நம் உடல் நலத்திற்கு இது எப்படி உதவுகிறது என்பதை விரிவாக பார்க்கலாமா?
உடல் எடையை குறைக்க...உடல் எடையை அதிகரிக்க வேண்டுமானால், அதற்கு சீத்தாப்பழம் உதவுகிறது. சீத்தாப்பழம் ஜூஸ் செய்வதற்கு, கொஞ்சம் தேனையும் சீத்தாப்பழத்தையும் பாலில் கலந்து தொடர்ந்து குடியுங்கள்.கர்ப்ப காலத்தின் போது...சிசுவின் மூளை, நரம்பியல் அமைப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு ஆகியவற்றின் வளர்ச்சிக்கு சீத்தாப்பழம் உதவுகிறது. கருச்சிதைவு ஏற்படாமல் இருக்கவும் இந்த பழம் உதவுகிறது.
ஆஸ்துமா நோயாளிகளுக்கு...சீத்தாப்பழத்தில் வைட்டமின் பி6 வளமையாக உள்ளது. இந்த வைட்டமினால் மூச்சுக்குழாய் அழற்சி குறைந்து ஆஸ்துமா ஏற்படுவதும் தடுக்கப்படும்.
மாரடைப்பசீத்தாப்பழத்தில் உள்ள மெக்னீசியம், நமக்கு உடல்நல பயனை அளிக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படாமல் நம்மை அது பாதுகாக்கும்.
செரிமானத்திற்கு நல்லதசீத்தாப்பழத்தில் தாமிரமும், டையட்டரி நார்ச்சத்தும் வளமையாக உள்ளதால், உண்ணுவதற்கு ஆரோக்கியமான பழமாக இது திகழ்கிறது. தாமிரம் இருப்பதால் அது செரிமானத்திற்கு உதவிடும். கூடுதலாக குடல் இயக்கம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளில் இருந்தும் அது உங்களை காக்கும்.
சர்க்கரை நோய்க்கு சிறந்த பழமசீத்தாப்பழத்தில் டையட்டரி நார்ச்சத்து அளவுக்கு அதிகமாக இருப்பதால், சர்க்கரை உறிஞ்சப்படும் அளவு குறையும். இதனால் டைப்-2 சர்க்கரை நோய் உருவாகும் அபாயம் குறையும்.இதில் 16.5% சர்க்கரை உள்ளது. கொழுத்த சதை உடையவர்கள் இப்பழத்தை சாப்பிட கூடாது
இரத்த அழுத்தத்திற்கசீத்தாப்பழத்தில் உள்ள சிறந்த உடல்நல பயன் - அதிலுள்ள வளமையான பொட்டாசியம் மற்றும் மெக்னீஷியம். இந்த இரண்டுமே உங்கள் உடலில் உள்ள இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.
கொலஸ்ட்ரால் அளவுகளசீத்தாப்பழத்தில் நியாசின் மற்றும் டையட்டரி நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. இவைகளால் கொலஸ்ட்ரால் அளவுகள் குறையும்.
உங்களுக்கு இரத்த சோகையா?சீத்தாப்பழத்தில் இரும்புச்சத்து வளமையாக உள்ளதால் இரத்த சோகைக்கும் அது சிகிச்சையளிக்கும்.
வாய் ஆரோக்கியமசீத்தாப்பழம் பற்களுக்கு மிகுந்த பயன்களை அளிக்கிறது. பல் மற்றும் ஈறு வலிக்கு எதிராக சீத்தாப்பழத்தின் தோல் உதவுகிறது.
கண்களை பார்த்துக் கொள்ளுங்களசீத்தாப்பழத்தில் ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் சி அடங்கியுள்ளது. இவை இரண்டுமே உங்கள் கண்களுக்கு நல்லதாகும். ப்ரீ ராடிக்கல்களை அழிக்க இது உதவுவதால், நல்ல கண் பார்வையை பராமரிக்க இது உதவிடும்.


 கீல்வாதத்தை தடுக்குமசீத்தாப்பழத்தில் மெக்னீசியம் உள்ளதால், அது உடலில் உள்ள நீரின் அளவை சரிசமமாக்கும். இது சீத்தாப்பழத்தின் முக்கியமான உடல்நல பயனாகும். இதன் காரணமாக மூட்டில் இருக்கும் அமிலங்கள் வெளியேற்றப்படும். இதனால் கீல்வாதம் வராமல் தடுக்கப்படும்.
 காலை குமட்டலை தடுக்குமகர்ப்பிணி பெண்களுக்கு இது மிகவும் நல்லதாகும். அதே போல் பிரசவத்திற்கு பின்பு உடல் எடையை குறைக்கவும் இது உதவும். முக்கியமாக, காலையில் ஏற்படும் குமட்டலை இது நீக்கும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டல், உணர்வின்மை, பசி, மனநிலையில் ஏற்ற இறக்கம் போன்றவைகளுக்கு எதிராக போராடும்.
 தோல் புற்றுநோயை அண்ட விடாதசீத்தாப்பழத்தில் உள்ள அசிடோஜெனின், தோல் புற்றுநோய்க்கு அறிகுறியான சரும சிதைவை நீக்கும். இதனால் சரும புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

புதன், 1 அக்டோபர், 2014

மாதவிடாய் பிரச்சினையா? மனதை தளரவிடாதீர்கள் !

பெண்களின் மன உளைச்சலை அதிகரிப்பதில் மாதவிடாய்க்கு முக்கிய பங்குண்டு. சரியான நேரத்தில் ரெகுலரான சுழற்சியாக இருந்தால் பிரச்சினையில்லை. ஆனால் முறையற்ற மாதவிடாய் என்றால் சிக்கல்தான். சரியான உணவுபழக்கமின்மை, மன அழுத்தம், உடல்நலக் கோளாறு, மாத்திரை உட்கொள்வது போன்றவைகளினாலும் மாதவிலக்கு சுழற்சியில் சிக்கல் ஏற்படும். எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட பாட்டி வைத்தியத்தை பின்பற்றி பாருங்களேன்.

உடல் உஷ்ணம் அதிகமாகும்

மாதவிடாய் சிக்கல் உள்ளவர்கள் பப்பாளிப்பழம், திராட்சை, அத்திப்பழம் ஆகியவற்றை சாப்பிடலாம். இது உடலில் உஷ்ணத்தை அதிகரிப்பதோடு மாதவிடாய் சுழற்சியை ரெகுலராக்கும்.
எள் மிட்டாய்எள் மிகச்சிறந்த மருந்தாகும். பீரியட்ஸ் பிரச்சினை உள்ளவர்கள் எள்ளில் செய்த உணவுகள், எள் மிட்டாய் போன்றவைகளை சாப்பிடலாம்.
மூச்சுப் பயிற்சி
மாதவிடாய் சிக்கல் உள்ளவர்கள் மூச்சுப் பயிற்சி மேற்கொண்டால் மன அழுத்தம் நீங்கி குறிப்பிட்ட சுழற்றிசியில் மாதவிடாய் வரும்.
மாதவிடாய் சிக்கல் தீர



பெருந்துத்தி இலை - 5 எடுத்து, அதோட மிளகு 5 சேர்த்து காலையில வெறும் வயிற்றில் மென்று சாப்பிடவேண்டும். மூன்று முதல் ஐந்துநாள் சாப்பிட ஒழுங்கான மாதவிடாய் வரும்.
இதற்கு மாவிலிங்கப்பட்டையும் நல்ல மருந்து தான். பட்டையை மையா அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து காலையில வெறும் வயிற்றில் சாப்பிட தாமதமான மாதவிடாய் தடையில்லாம வரும்.
சதக்குப்பை 50 கிராம் எடுத்து பொன்வறுவலா வறுத்து பொடியாக்கி, 3 பாகமாக்கி வைத்துக்கொள்ளவேண்டும். ஒரு பாகத்தை இரண்டாக பிரித்து, காலை, மாலை சாப்பிடவேண்டும். கூடவே, பனைவெல்லம் கொஞ்சம் சேர்த்துக்கணும். இப்பிடி மூணுநாள் சாப்பிட்டாலே வராத மாதவிடாய் சிக்கல் தீரும்.
கருஞ்சீரகம் 25 கிராம் எடுத்து பொன் வறுவலா வறுத்து பொடியாக்கி, பனைவெல்லம் சேர்த்து காலை, மாலை சாப்பிட மாதவிடாய்க் கோளாறு தீரும்.
கல்யாணமுருங்கை இலைகல்யாணமுருங்கை மாதவிடாய்க் கோளாறுக்கு கைகண்ட மருந்து. கல்யாணமுருங்கை இலைச்சாறு 10 மில்லி எடுத்து, காலையில வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா, மாசக்கணக்குல வராத மாதவிடாய் வரும்.
வல்லாரை இலை சூரணம் கால் ஸ்பூன் எடுத்து, நெய் விட்டு கலந்து சாப்பிட வேண்டும். இதனால் மாதக்கணக்கில் வராத மாதவிடாய் ஒழுங்கா வரும்.

புதன், 10 செப்டம்பர், 2014

வேப்பிலையின் மருத்துவ குணங்கள்

வேப்பிலையை பச்சையாகவும் வேக வைத்தும் அல்லது கசாயம் செய்தும் சாப்பிடடு வந்தால் தீராத நோய் அனைத்தும் தீர்ந்து விடும்.
*
வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் புரதச் சத்து, 10 விதமான அமினோ அமிலங்கள் உள்ளன.
*
வேப்பிலையை நம்முடைய முன்னோர்கள் பலவிதமான ஆயுர்வேத சித்த மருந்துகளில் உபயோகப்படுத்தியுள்ளனர். வேப்பிலை சாறில் தொழுநோய், வயிற்றுப் புழுக்கள், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாவதை அறிந்து இந்த நோய்களுக்கு உபயோகப் படுத்தியுள்ளனர்.*
நாள்பட்ட தோல் வியாதிகளை எந்த விதமான பக்க விளைவுகளும் இன்றி குணப்படுத்தக் கூடிய ஒரு அற்புதம் வேப்பிலைக்கு உண்டு. சோரியாசிஸ், சாதாரண சிரங்கு, நமைச்சல், புழுவெட்டு நோய், மருக்கள் முதலியவை வேப்பிலையால் குணமாகக் கூடிய சரும நோய்கள்.*
வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் முகப்பரு மறைந்துவிடும்.*
புத்தம் புதிதாக பறிக்கப்பட்ட இலைகளை பயன்படுத்த வேண்டும்.*
வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சுண்டக் காய்ச்சி, அதனுடைய அடர்த்தி அதிகமான நிலையில் உபயோகிப்பது.*
வேப்பிலையை சாறு எடுத்து உபயோகிப்பது.*
வேப்பிலையை அப்படியே அரைத்து சரும வியாதிகள் மேல் பூசலாம்.*
சரும வியாதி உள்ளவர்கள் வெந்நீரில் வேப்பிலை போட்டு கொதிக்கவைத்து அந்த நீரில் குளித்து வரலாம்.*
சின்னம்மை, தட்டம்மை போன்ற அம்மை நோய்களுக்கு கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்.*
வேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.*
வேப்பிலையை காலையில் டீயுடன் சேர்த்து அருந்தினால் சாதாரண சளி இருமல் குறையும்.

*
வேப்பிலையை அரைத்து வீக்கம் உள்ள இடங்கள், மூட்டுகள், வாத நோய் கண்ட இடங்களில் பூசலாம். முதுகுத்தண்டு வலி, தசைப்பிடிப்பு போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாகும்.*
விவசாயத் துறையில் பூச்சிக் கொல்லியாகவும், கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள முக்கிய வேதிப் பொருள் தற்போது நாம் உபயோகிக்கும உரங்களில் சேர்க்கப்படுகிறது.*
அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அழகுக்காக உபயோகப்படுத்தும் கிரீம்கள், லோஷன்கள், சோப்பு மற்றும் கூந்தல் எண்ணெய்களில் வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது.*
சூழ்நிலைக்கேற்ப உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது.*
ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மை வேப்பிலைச்சாறுக்கு உண்டு.*
வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை மற்றும் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை மட்டுப்படுத்தும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.*
மலேரியக் காய்ச்சலுக்கு குளோரோக்குவின் என்ற மருந்து கொடுக்கப்படும். இந்த மருந்துக்கு கட்டுப்படாமல் இருக்கும் காய்ச்சலை வேப்பிலை கொடுத்து கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.*
காளான் நோய்களான டிரைக்கோபைட்டா மற்றும் பிற காளான் நோய்களையும் வேப்பிலையைக் கொண்டு தீர்க்க முடியும்.*
பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பண்பு வேப்பிலைக்கு உண்டு. கிராம் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.*
வைரஸ் நோய்களை எதிர்க்கும் சக்தி வேப்பிலைக்கு உண்டு. இதனை அம்மை நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்தாக நம் முன்னோர் காலத்திலிருந்து பின்பற்றப் படுகிறது.*
புற்றுநோய் எதிர்ப்பு தன்மை வேப்பிலைக்கு உண்டு. இதனால் புற்றுநோய் வளர்ச்சியைத் தடைப்படுத்தக்கூடிய மருந்துகளில் வேப்பிலை பெரும்பங்கு வகிக்கிறது.

வியாழன், 17 ஜூலை, 2014

நோன்பு காலங்களில் அதிகாலையில் பழச்சாறு குடிப்பது நல்லது !!!

இஸ்லாமியர்கள் நோன்பு காலங்களில் அதிகாலையில் பழச்சாறு குடிப்பது உடல் ஆரோக்கியம் மற்றும் அன்றைய நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பதற்கும் உதவுவதாக உணவுத்துறை நிபுணர்கள் அறிவுருத்தியுள்ளனர்.

பழச்சாறு அருந்துதல் உடலில் நீர்சக்தியை அதிகரிக்கும்.காரணம் பழச்சாறில் பொட்டசியம் மற்றும் குளுக்கோஸ் போன்ற நீர்சக்தியை அதிகரிக்க கூடிய பல வைட்டமின்கள் உள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நோன்பு காலங்களில் காபி மற்றும் தேநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், அது சிறுநீர் பிரிப்பதில் பிரச்சனையை ஏற்படுத்தக் கூடும்.

பிரசவ வலி வரப் போவதற்கான 6 அறிகுறிகள் !!!

பெண்களுக்கு வரும் வலிகளிலேயே பிரசவ வலி மிகவும் கொடியது. ஏனெனில் எந்த வலியை வேண்டுமானாலும் தாங்க முடியும், ஆனால் பிரசவ வலி வந்தால், அதைத் தாங்கிக் கொள்வது என்பது கடினமானது. ஆகவே கர்ப்பமாக இருப்பவர்கள், பிரசவ வலி வரப் போகிறது என்பதைத் எப்படி நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு பிரசவ வலி வருகிறதென்றால், அதற்கென்று சில அறிகுறிகள் உள்ளன. அந்த அறிகுறிகளை முன்பே தெரிந்து கொண்டால், அந்த வலி ஆரம்பிப்பதற்கு முன்பே மருத்துவமனைக்கு சென்று விடலாம். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்று பார்ப்போமா!
*
பிரசவ வலி வருவதற்கான அறிகுறிகளில் முக்கியமானது முதுகு வலி தான். எப்போது முதுகு வலி சாதாரணமாக வரும் வலியைவிட, அளவுக்கு அதிகமாக வருகிறதோ, அதை வைத்து பிரசவ வலி வரப்போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.*
கர்ப்பமாக இருக்கும் போது குழந்தையின் வளர்ச்சியினால் கருப்பை விரிவடையும். அதுவே குழந்தை வெளியே வர ஆரம்பிக்கிறதென்றால், அதாவது பிரசவ வலி வரப்போகிறதென்றால், அந்த கருப்பை சுருங்குவதற்கு ஆரம்பமாகும். அவ்வாறு கருப்பை சுருங்கும் போது எந்த ஒரு வலியும் இருக்காது. ஆனால் நன்கு கூர்ந்து கவனித்தால், கருப்பை சுருங்குவதை அறியலாம். ஆகவே அதை வைத்து நன்கு தெரிந்து கொள்ளலாம்.*
கருப்பை வாய்க்குழாயிலிருந்து அதிகமான அளவில் சளி போன்ற திரவம் வெளியேற ஆரம்பிக்கும். அவ்வாறு வருவதுப் போல் தெரிந்தால், அதை வைத்தும் அறிந்து கொள்ள முடியும்.*
சில நேரங்களில் கருப்பையிலிருந்து இரத்தம் வடிய ஆரம்பிக்கும். அவ்வாறு நிகழ்ந்தால், உடனே மருந்துவரை அணுக வேண்டும்.*
ஏழாவது மாதத்திற்கு மேல் அடிக்கடி சிறுநீர் அவசரமாக வருவது போன்று இருக்கும். ஆனால் அதுவே பிரசவம் நடைபெறப் போகிறதென்றால், அப்போது சற்று வித்தியாசமாக உணர்வீர்கள். சொல்லப்போனால், வயிற்றில் ஒன்றுமே இருக்காது, இருப்பினும் அவசரம் என்பது போல் இருக்கும். ஏனெனில் அது வயிற்றில் இருக்கும் குழந்தை வெளியே வருவதற்கான ஒரு அறிகுறி.*
ஏழாம் மாதத்திலிருந்து வயிற்றில் உள்ள குழந்தையின் அசைவை நன்கு உணர முடியும். ஆனால், பிரசவ வலி வருவதற்கு முன், குழந்தையின் அசைவு குறைந்துவிடும். ஏனெனில் அப்போது குழந்தை வெளியே வருவதற்கு ஒரு சரியான ஒரு நிலையை அமைந்து இருப்பதே ஆகும்.மேற்கூறியவையே பிரசவ வலி வரப்போவதற்கான அறிகுறி. ஆகவே இந்த மாதிரியான அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், உடனே மருத்துவமனைக்கு செல்வது நல்லது. மேலும் வேறு என்ன அறிகுறிகள் இருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

புதன், 25 ஜூன், 2014

நாள்பட்ட தசைவலி, மூட்டு வலிகளைக் குறைக்கும் விட்டமின் டி! ! !

நாள்பட்ட தசைவலி மற்றும் மூட்டு வலியை, விட்டமின் டி குறைக்கும், என, விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா தலைநகர், வியன்னாவில் உள்ள, எலும்பு முறிவு மருத்துவமனையின் தலைவர், ப்ளோரியான் வெப்னர் கூறியதாவது:
விட்டமின் டி குறைவால், "பைப்ரோமாயல்ஜியா’ என்னும் நோய் தாக்குகிறது.
இந்த நோய் பாதித்தவர்களின் உடல் தசைகள் மற்றும் மூட்டுகளில், ஏற்படும் வலி குறைவதில்லை.
இந்த வலியால் பாதிக்கப்பட்டோர், தூக்கமின்மை, களைப்பு, மன அழுத்தம் மற்றும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
இத்தகைய நோயாளிகளுக்கு, விட்டமின் டி யை போதிய அளவில் அளித்தால், குணமடைய வாய்ப்பு உண்டு.
நோய் முற்றிலும் குணமாகாவிட்டாலும், தசை வலி மற்றும் மூட்டு வலி பெருமளவு குறையும்.
இந்த ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட, 30 பேருக்கு, விட்டமின் டி மருந்துகள் அளிக்கப்பட்டன.
இருபது வாரங்கள், விட்டமின் டி மருந்துகளை உட்கொண்டவர்களின், நீண்டநாள் வலிகள் பெருமளவு குறைந்தது கண்டறியப்பட்டது. அவர்களிடம் மன அழுத்தம் சிறிதும் காணப்படவில்லை. இவ்வாறு, வெப்னர் கூறியுள்ளார்.

திங்கள், 16 ஜூன், 2014

உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாதா மருந்துகள் !!!


குழந்தைகளை நல்ல படியாக பராமரித்து வளர்ப்பது என்பது பெரிய காரியமாகும். அவர்களை நோய் நொடி அண்டாமல் ஆரோக்கியமாக இருக்க, ஒவ்வொரு தாயும் அவர்களை கண்ணும் கருத்துமாக பாதுகாக்க முற்படுகிறாள். அப்படி இருந்தும் பல காரணங்களால் குழந்தைகளுக்கு கிருமிகளினால் பல நோய்த்தொற்று ஏற்படுகிறது. அதன் விளைவாக காய்ச்சல், சளி, இருமல் என்று பல அவஸ்தைக்கு ஆளாகின்றனர். அப்படிப்பட்ட நேரத்தில், அவர்களுக்காக பரிந்துரைக்கப்பட்ட சில மருந்துகளை கொடுக்கின்றோம்.

குறிப்பாக கை குழந்தைகளுக்கும், தவழும் குழந்தைகளுக்கும் மருந்துகள் கொடுக்கும் முன், கட்டாயம் மருத்துவரிடம் ஆலோசனையை பெற வேண்டும். ஏனெனில் குழந்தைகளுடைய நோய் தடுப்பாற்றல் சக்தியானது மிகவும் குறைவாக இருப்பதால், குழந்தைகளை கிருமிகள் தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளன. அதன் விளைவாக வியாதிகள் வரக்கூடும். இதற்காக மருந்து கொடுக்கும் போது, பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். அதுவும் அத்தகைய மருந்துகள் இயற்கையான அல்லது மூலிகை மருந்தாக இருந்தாலும் கூட கவனம் வேண்டும்.

பொதுவாக தவழும் குழந்தைக்கு அடிக்கடி சளி மற்றும் இருமல் பிடித்துக் கொள்ளும். ஆனால் 6 வயதிற்கு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு, பெரியவர்கள் சாப்பிடும் சளி மற்றும் இருமல் மருந்தை கொடுப்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும். ஏனென்றால், மருந்துகளானது குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய அளவு கொடுக்காமல், குழந்தைக்கு மருந்தானது திறம்பட செயல்படவில்லை என்று சிலர் அளவுக்கு மீறி மருந்தைக் கொடுத்துவிடுகின்றனர். ஆகவே இது குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது.

இப்போது குழந்தைகளுக்கு கண்டிப்பாக கொடுக்கக்கூடாத 8 வகையான மருந்துகளை கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து, குழந்தைகளுக்கு அவற்றை கொடுப்பதை அறவே தவிர்த்துவிடுங்கள்.

ஆஸ்பிரின் (Aspirin)

மருத்துவர் பரிந்துரைக்காவிட்டால், ஆஸ்பிரின் அல்லது ஆஸ்பிரின் கலந்த மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆஸ்பிரினால், குழந்தைகளின் சிறுநீரகமும், மூளையும் பாதிப்படையும். எனவே மருந்து கடைகளில் வாங்கும் அனைத்து மருந்துகளிலும் ஆஸ்பிரின் இருக்காது என்று கற்பனை செய்து கொள்ளாதீர்கள். எப்போதும் மருந்து வாங்கும் முன், முதலில் அதன் லேபிளை நன்கு படித்து பின்னரே வாங்க வேண்டும். மேலும் சாலிசிலிக் அல்லது அசிடைல்சாலிசிலிக் அமிலம் என்ற பெயரைக் கண்டால், அதுவும் ஆஸ்பிரினையே குறிக்கும். காய்ச்சல் என்றால், 6 மாதங்களுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பாராசெட்டமால் (paracetamol) அல்லது இபுப்ரோஃபெனைக் (ibuprofen) கொடுக்கலாம்.

இருமல் மற்றும் சளி மருந்துகள்

குழந்தை மருத்துவத்தின் அமெரிக்க அகாடமியில் உறுப்பினர்களாக இருக்கும் குழந்தை மருத்துவர்கள், கண்டிப்பாக குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமல் மருந்துகளை பரிந்துரைக்கமாட்டார்கள். ஏனெனில் அவை சளி மற்றும் இருமலை குணப்படுத்துவதில்லை. சில நேரம் அதிக அளவில் கொடுப்பதால், அது ஆபத்தை கூட விளைவிக்கும். அதிலும் தூக்க கலக்கம், வயிற்று வலி, சொறி, அதிகமான இதயத் துடிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் ஒவ்வொரு வருடமும் வீட்டிலேயே சளி மற்றும் இருமல் மருந்து கொடுப்பதால் தான், ஆயிரக்கணக்கான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

குமட்டலை தடுக்கும் மருந்துகள்

மருத்துவர்கள் பரிந்துரைக்காவிட்டால் கண்டிப்பாக குழந்தைகளுக்கு குமட்டலை தடுக்கும் மருந்துகளை கொடுக்கக்கூடாது. பொதுவாக குமட்டல் வந்தால், நீண்ட நேரம் இருக்காது. ஆகவே குமட்டல் ஏற்படும் போது, அதனை தடுக்க மருந்துகள் அவசியம் இல்லை. சாதாரணமாக இருந்தாலே, அவை குணமாகிவிடும். அதை விட்டு, மருந்துகளை கொடுத்தால், அது ஆபத்தை விளைவிக்கும். ஒருவேளை குழந்தை வாந்தி எடுத்தால், அவர்களுக்கு தேவையான அளவு நீராகாரம் கொடுத்தால், உடல் வறட்சியைத் தடுக்கலாம். கைமீறிப் போனால், மருத்துவரை அணுகுவது நல்லது.

பெரியவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள்

பெரியவர்கள் சாப்பிடும் மருந்துகளை சிறிதளவு கூட குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. ஏனெனில் குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்துகளை விட, கைக்குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்துகள் சற்று அடர்ந்த நிலையில் இருப்பதால், மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

வேறொரு குழந்தைக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள்

மற்ற குழந்தைக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை, உங்கள் குழந்தைக்கு கொடுத்தாலும் ஆபத்தில் முடிய வாய்ப்புள்ளது. எனவே எப்போதும் உங்கள் குழந்தைக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டுமே கொடுக்க வேண்டும்.

காலாவதியான மருந்துகள்

காலாவதியான மருந்துகளை உடனடியாக மருந்து பெட்டியில் இருந்து தூக்கி எறிந்து விட வேண்டும். மேலும் நிறம் மாறிய மருந்துகளையும் குப்பையில் போட வேண்டும். ஏனெனில் காலாவதியான மருந்துகளின் திறன் செயலிழந்திருக்கும். மேலும் அது உயிருக்கே பெரும் ஆபத்தையும் விளைவிக்கும்.

கூடுதலான அசிடமினோஃபென்

காய்ச்சல் மற்றும் உடம்பு வலியை குறைக்கும் மருந்துகள் பலவற்றிலும் அசிடமினோஃபென் (acetaminophen) கலக்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுக்கும் முன் கவனமாக இருக்க வேண்டும். ஒருவேளை அதனை பற்றி சரியான அறிவு இல்லையென்றால், உடனே மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும்.

மெல்லும் தன்மையுள்ள மருந்துகள்

மெல்லும் தன்மையுள்ள மருந்துகள் அல்லது மாத்திரைகளை குழந்தைகளுக்கு கொடுத்தால், அது அவர்களுடைய தொண்டை குழியை அடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை குழந்தை திடமான உணவை உண்ண ஆரம்பித்து விட்டால், அவர்களுக்கு மாத்திரைகள் கொடுக்க நினைப்போம். அப்படிப்பட்ட நேரத்தில் மாத்திரைகளை பொடியாக்கி, அவற்றை குழந்தைகளின் உணவில் கலந்து கொடுக்கலாமா என்று மருத்துவரிடம் கேட்டு பின்னரே கொடுக்க வேண்டும்

திங்கள், 2 ஜூன், 2014

சில இயற்கை மருத்துவம் !!!

சாதாரமாக கடையில் கிடைக்கும் பச்சை வாழைப்பழத்தில் இவ்வளவு பயன்களா…? என்று வாயைப் பிழந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது என்பதை படித்துப் பயன் கொள்ளுங்கள்….
*
வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.*
வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.*
உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.*
வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.*
ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.*
இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.*
மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்து சீழ் வெளியேறி விடும்.*
வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச்சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படலாம்.