நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் 12 நன்மைகள்!!!


உடலில் 80 சதவீதம் தண்ணீர் நிறைந்துள்ளது. எனவே தான் இவ்வுலகில் உணவு இல்லாவிட்டாலும் வாழ முடியும், ஆனால் தண்ணீரின்றி வாழ முடியாது. மேலும் தண்ணீர் உடலில் போதிய அளவில் இருந்தால், உடல் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். பலர் தண்ணீரை அதிகம் குடிக்காமல் இருக்கின்றனர். இதற்காக அவர்களுக்கு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகளைப் பற்றி நன்கு தெரியவில்லை என்று அர்த்தம் இல்லை. அதிகமான வேலைப் பளுவினால், தண்ணீர் குடிப்பதற்கு கூட நேரமில்லை என்று தான் சொல்ல வேணடும்.





உண்மையில் தண்ணீர் குடிப்பதால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை தடுக்கலாம். அதனால் தான் மருத்துவர்கள் கூட தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். மேலும் மனித உடலுக்கு ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் போதுமானதாக இருக்கலாம். ஆனால் அது நிச்சயம் போதாது. ஏனெனில் நாம் வெளியே வேலைக்கு செல்வது, பயணம் மேற்கொள்வது போன்றவற்றை செய்வதால், 8 டம்ளர் தண்ணீர் என்பது குறைவு தான். ஆகவே குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதால், உடலானது நன்கு செயல்படும். அதிலும் கோடைகாலம் என்றால், குறைந்தது 4-5 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இப்போது தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை பட்டியலிட்டுள்ளோம். அதை படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை தவறாமல் தொடருங்கள்.

எனர்ஜி கிடைக்கும்
 உடலில் தண்ணீர் தான் அனைத்து பாகங்களுக்கு ஊட்டச்சத்துக்களை சுமந்து செல்வதோடு, கழிவுகளை வெளியேற்றும். எனவே தான் உடலுக்கு எனர்ஜி வேண்டுமெனில், தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

கழிவுகளை வெளியேற்றும்
அனைவரது உடலிலுமே ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கில் கழிவுகள் சேரும். ஏனெனில் மாசுக்கள், ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது போன்றவற்றால் உடலில் கழிவுகள் அதிகம் சேரும். எனவே இத்தகையவற்றை உடலில் இருந்து முறையாக வெளியேற்றுவதற்கு தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும்

உடல் வெப்பத்தை சீராக வைக்கும்
 உடலின் வெப்பத்தை சீராக வைப்பதற்கு, தினமும் போதிய அளவில் தண்ணீரை குடிக்க வேண்டும். இல்லையெனில் உடலில் அதிகப்படியான வெப்பம் ஏற்பட்டு, ஆபத்தை விளைவிக்கும்

மெட்டபாலிசம் அதிகமாகும்
 உடலில் மெட்டபாலிசம் எனப்படும் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது.


தசைப்பிடிப்புகளை தடுக்கும்
 80 சதவீத தசைகள் நீரால் சூழப்பட்டுள்ளது. எனவே போதிய தண்ணீர் உடலில் இல்லாவிட்டால், தசைகளில் பிடிப்புகள் அதிகரிக்கும். ஏனெனில் நீருக்கு பதிலாக கழிவுகள் தங்கி, பிடிப்புகளை ஏற்படுத்தும். எனவே அவற்றை வெளியேற்ற நீர் மிகவும் அவசியம் ஆகும்

முறையான குடலியக்கம்
நிறைய பேர் மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுகின்றனர். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், அப்போது அதிகப்படியான தண்ணீர் குடித்தால், அவை சரியாகிவிடும். ஏனெனில் தண்ணீர் குடலியக்கத்தை சீராக வைக்கும்.

பொலிவான சருமம்
முகத்தில் முகப்பருக்கள், பிம்பிள் போன்றவை அதிகப்படியான அழுக்குகள் மற்றும் எண்ணெய் காரணமாகத் தான் ஏற்படுகிறது. எனவே இத்தகைய அழுக்குகளை வெளியேற்றுவதற்கும், பருக்கள் வராமல் இருக்கவும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

அசிடிட்டியை குறைக்கும்
பொதுவாக வயிறானது உணவுகளை செரிப்பதற்கு நொதியை சுரக்கும். அது மிகவும் சக்தி அமிலத்தன்மை நிறைந்தது. எனவே அதன் அமிலத்தன்மையை குறைப்பதற்கு, அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், அது வயிற்றை அரிக்க ஆரம்பித்துவிடும்

மூளை செயல்பாடுகள்
மூளையில் 90 சதவீத தண்ணீர் உள்ளது. ஆனால் போதிய தண்ணீர் உடலில் இல்லாவிட்டால், தலைவலி, சோர்வு போன்றவை அதிகம் ஏற்படும். அதிலும் 24 மணிநேரத்திற்கு மேலாக உடல் வறட்சி இருந்தால், இது மிகவும் மோசமான நிலையை உண்டாக்கிவிடும்.
மூட்டு உராய்வைத் தடுக்கும்
 உடலிலேயே மூட்டுகள் மிகவும் முக்கியமான ஒன்று. எப்படி இயந்திரங்களில் இணைப்புகள் உள்ளதோ, அதேப் போல் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் இணைப்பது மூட்டுகள் தான். இத்தகைய மூட்டுகளில் ஏற்படும் உராய்வைத் தடுப்பதற்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், மூட்டு வலிகள் ஏற்பட ஆரம்பிக்கும்.

ஊட்டச்சத்துக்களை கொடுப்பதற்கு...
உடலில் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்களை எடுத்து செல்வது தண்ணீர் மற்றும் இரத்த அணுக்கள் தான். ஆகவே தண்ணீர் குறைவாக இருந்தால், உடலின் பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகும்.

எடை குறைப்பதற்கு...
தண்ணீர் வயிற்றை நிரப்புவதோடு, மெட்டபாலிசத்தின் அளவையும் அதிகரிப்பதால், அது உடல் எடையை குறைக்கவும் உதவியாக இருக்கும்.

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

நீச்சல் அடித்தால் போதும் ஸ்லிம் வயிறுக்கு!! நீச்சல் தெரியுமா உங்களுக்கு?

உடலில் ஏற்படும் பிரச்சனைகளில் தொப்பை பிரச்சனை தான் பெரும் பிரச்சனையாக உள்ளது. அத்தகைய தொப்பை பிரச்சனை உங்களுக்கு இருக்கா? அதைக் குறைக்கப்படாத பாடுபடுகிறீர்களா? நடப்பது, ஓடுவது, ஜிம் என அனைத்தையும் செய்து பார்த்து விட்டு டல்லாக இருக்கிறீர்களா? இதை படியுங்கள் முதலில்!
நீச்சல் உடம்பைக் குறைக்க உதவும் என்பது எல்லாரும் அறிந்த ஒன்று. அந்த நீச்சலில் பல வகையான டெக்னிக்ஸ் உள்ளது. அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தசையை வலுப்படுத்தும். அதில் வயிற்றுப் பகுதியைக் குறைக்கவும் வலுப்படுத்தவும் சில டெக்னிக்ஸ் உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதை பற்றி தான் இங்கு கூற இருக்கிறோம்... அதை பார்ப்போமா?
நீச்சலைப் பற்றிய சில தகவல்கள்:
நீச்சல் ஒரு நல்ல உடற்பயிற்சி. உடலின் அனைத்து தசைகளையும் ஒரே நேரத்தில் பயிற்சி செய்ய வைக்கிறது என்பது தெரிந்தது. தொடர்ந்து நீச்சல் பயிற்சியை மேற்கொண்டால் உடல் வலுமைப் பெறும். ஆனால் பிற உடற்பயிற்சிகளைச் சரியான முறையில் செய்ய வேண்டும். சரியான முறையில் செய்யவில்லை என்றால் உள்காயங்கள் ஏற்படும். ஆனால் நீச்சலில் இந்த வகை காயங்கள் குறைவே. மேலும் நீச்சலானது எந்த வயதிலும், எந்த நிலையிலும் செய்யக்கூடியது. அதிலும் வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் என்று அனைவரும் செய்யக் கூடியப் பயிற்சிகளில் இதுவும் ஒன்று. சரி, இப்போது வயிற்றுப் பகுதியை வலிமைப்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.


1. பிடித்த நீச்சல் வகையை வைத்துப் பல முழு-சுற்றுகளை முடிக்கவும். நீச்சலில் பொதுவான முறைகளான வண்ணத்துப்பபூச்சி அசைவு, பின்புறமாக நீச்சல் அடித்தல், முங்கு நீச்சல் என இவை அனைத்தும் வயிற்றுப் பகுதியை வலுப்படுத்தும். இந்த மூன்று வகையையும் மாற்றி மாற்றி, ஒரு முழு-சுற்று செய்வதன் மூலம் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும்.
2. தண்ணீரில் உடல் எடைக் குறைவாக இருப்பதாலும், எளிதில் அசைக்க முடிவதனாலும், நீந்தாமல் நடந்தாலே, உடல் வலிமை அடையும். அவ்வாறு நடக்கும் போது, நீர் குறைந்த பகுதியில் கால்களை மடக்கி முட்டியை வைத்து நெஞ்சைத் தொடச் செய்யவும். இவ்வாறு செய்யும் போது, முதுகு பகுதி நேராகவும், வயிறு சற்று உள்ளே இழுத்தவாறும் இருப்பது அவசியம். முட்டியை உயர்த்தும் போது, வயிறு நன்றாக அமுங்க வேண்டும்.
3. அதேப்போல் நீர் நிறைந்த பகுதியில் முன் கூறியவாறு செய்யும் போது, நீச்சல் குளத்தின் சுவரை நன்றாக பிடித்துக் கொள்வது கால்களை எளிதில் தூக்க உதவும். இந்த பயிற்சியை எவ்வளவு வேகமாக முடியுமோ, அவ்வளவோ வேகமாக செய்வது நல்ல பலனைத் தரும்.
4. ஒரே இடத்தில் நின்று கொண்டு கையையும், கால்களையும் அசைப்பது கூட நல்ல பயிற்சி. இந்த பயிற்சி செய்யும் போது வலியே இருக்காது, ஆனால் நீரை விட்டு வெயியே வந்த பின் வலி உயிர் போகும். ஆகவே கவனம் தேவை. இந்த பயிற்சியைக் குறைந்த நேரம் செய்வது நல்லது.
5. அடுத்ததாக நீச்சல் பழகும் போது உபயோகிக்கும் பலகை ஒன்று உள்ளது. அதை ஆங்கிலத்தில் கிக்போர்டு (Kickboard) என்று கூறுவார்கள். நீச்சலைப் புதிதாக பழகுபவர்கள், இதனைப் பிடித்துக் கொண்டு கால்களை ஆட்டி நீந்துவார்கள். வயிறு குறையவும், இதையே செய்யலாம். ஆனால் நல்ல பலனைப் பெற கால்களையும், உடலையும் நீருக்கு மேல் வருவது போல செய்ய வேண்டும். அப்படி செய்தால் வயிறு நன்றாக குறையும். இந்த முறைப்படி நீச்சல் அடித்து வயிற்றுப் பகுதியைக் குறையுங்கள்.
கவனிக்க வேண்டியவை:
* நீச்சல் நல்ல பயிற்சி தான். ஆனால் நீரில் மூழ்கும் அபாயத்தை நாம் மறக்கக் கூடாது. எனவே எப்போதும் நிறைய பேர் இருப்பது போல பார்த்துக் கொள்ளவும்.
* நீச்சல் குளத்தில் காப்பாளர் இருப்பது அவசியம். அவ்வாறு இருக்கும் நீச்சல் குளத்தைத் தெரிந்தெடுப்பது நல்லது.
* நீச்சல் தெரியாதவர்கள் முறைப்படி கற்றுக் கொள்வது அவசியம். அதன் பின்னரே இந்த வகை பயிற்சி செய்ய வேண்டும். இல்லையேல் ஆபத்தை விலைக் கொடுத்து வாங்குவது போல் ஆகிவிடும்.

பிறந்த குழந்தையுடன் பயணிக்கும் போது தெரிந்து கொள்ள வேண்டியவை...

குழந்தைகள் எப்போதுமே வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதில்லை. அவர்களுடன் அவ்வப்போது கவனமாகவும், பாதுகாப்புடனும் வெளியே செல்ல வேண்டும். உதாரணமாக, குழந்தை பிறந்ததும், அவர்களுடன் வெளியே செல்ல நினைக்கும் போது, காரில் செல்வது நல்லது. அதற்காக எங்கு சென்றாலும் காரில் செல்ல வேண்டும் என்பது பற்றி பேசவரவில்லை. அவ்வாறு வெளியே நீண்ட தூரம் பயணம் செய்வது நல்லதா கெட்டதா என்பது பற்றியது தான்.
ஆனால் குழந்தை பிறந்த பின்னர் தாயும், சேயும் 40 நாட்கள் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் தான் பிரசவத்தின் போது ஏற்படும் உள்காயங்கள் அனைத்தும் குணமாகும். மேலும் இந்த நாட்களில் குழந்தைகளை எளிதில் நோய்கள் தாக்கும் என்பதாலேயே தான். இருப்பினும், ஏதேனும் முக்கியமான விஷயத்திற்காக விமானத்தில் பயணத்தை மேற்கொள்ளலாமா என்று கேட்கலாம்?


எனவே தான் அத்தகைய புதிய அம்மாக்களுக்காக பொதுவாக பயணம் மேற்கொள்வது பற்றிய ஒருசில அடிப்படைகளை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, முடிவெடுங்கள்.
* குழந்தை பிறந்தவுடன் விமானத்தில் பயணம் செய்வதற்கு, விமான நிறுவனங்களில் ஒருசில குறிப்பீடுகள் உள்ளன. அவை குழந்தை பிறந்து குறைந்தது 2 வாரங்களாவது இருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு விமானத்தின் குறிப்பீடுகளும் வேறுபடும். எனவே அதனை தெரிந்து கொள்ள வேண்டும்.
* குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்தாலோ அல்லது பிறவியிலேயே ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதனை விமானத்தில் பயணம் செய்வதற்கு முன்பே, விமான நிறுவனங்களிடம் தெரிவிக்க வேண்டும்.
* பிறந்த குழந்தையுடன் விமானத்தில் பயணம் செய்யும் போது, செய்ய வேண்டியவற்றில் முக்கியமானவை காதுகளில் காற்று புகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் விமானத்தில் பயணம் செய்யும் போது குழந்தையின் காதுகளில் அழுத்தமானது அதிகரித்து, காதுகளில் வலியை உண்டாக்கிவிடும். எனவே இவற்றில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
* ஒருவேளை ரயிலில் பயணம் செய்வதென்றால், அப்போது எந்த ஒரு குறிப்பீடுகளும் இல்லை. மேலும் ரயிலில் செல்லும் போது குழந்தையும் நன்கு சந்தோஷமாக, எந்த ஒரு தொந்தரவுமின்றி பயணம் செய்யும். ஆனால் முக்கியமாக எங்கு வெளியே சென்றாலும், குழந்தைக்கு வேண்டிய மருந்துகள், ஆடைகள், நாப்கின்கன் போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
* காரில் பயணம் செய்வதாக இருந்தால், குழந்தைகளுக்கான பேபி கார் ஷீட் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் நீண்ட தூரம் பயணம் செய்யும் போது மடியில் வைத்துக் கொண்டு சென்றால், திடீரென்று ப்ரேக் போடும் போது குழந்தை வழுக்கி விழக் கூட வாய்ப்புள்ளது.
* குழந்தையின் மேல் சூரியனின் கதிர்கள் நேரடியாக படும்படி வைத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் அது குழந்தையின் சருமம் மற்றும் கண்ணிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் அவ்வாறு சூரியக் கதிர்கள் பட்டால், அது குழந்தையின் உடலில் வறட்சியை உண்டாக்கிவிடும். அதற்காக குழந்தையை ஏசி இருக்கும் இடத்திற்கு நேராகவும் வைக்க கூடாது. அது குழந்தைக்கு இருமல் அல்லது சளி போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.
* எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தைக்கு மூன்று வயதிற்கு மேல் இருந்தால், எந்த ஒரு பயமுமின்றி, கார், ரயில் அல்லது விமானம் போன்ற எதிலும் அச்சமின்றி பயணத்தை மேற்கொள்ளலாம்.

வியாழன், 28 மார்ச், 2013

பூண்டு ஊறுகாய் !

தேவையானப்பொருட்கள்:
பூண்டு பற்கள் - 1 கப்
புளி - ஒரு சிறு எலுமிச்சம் பழ அளவு
மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணை - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
வெல்லம் - ஒரு சிறு துண்டு
வறுத்தரைக்க:
தனியா - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
4 அல்லது 5 முழு பூண்டை எடுத்து, பூண்டு பற்களைத் தனியாக எடுத்து தோலுரித்துக் கொள்ளவும். இதற்கு நாட்டு பூண்டு எனப்படும் சிறிய அளவு பூண்டு பற்கள் தேவை. பெரிய அளவு பற்களாய் இருந்தால், நீள வாக்கில் 2 அல்லது 4 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 1 கப் பூண்டு பற்களை எடுத்துக் கொள்ளவும்.
புளியை ஊற வைத்து ஒரு கப் அளவிற்கு கெட்டியாக புளித்தண்ணீரை எடுத்து வைக்கவும்.
வெறும் வாணலியில், தனியா, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை சிவக்க வறுத்தெடுத்து, ஆற விட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு அடி கனமான வாணலியை அடுப்பிலேற்றி, எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் பெருங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும். பின்னர் அதில் உரித்த பூண்டு பற்களைப் போட்டு சிவக்க வதக்கவும். பூண்டு நன்றாக வதங்கிய பின் புளித்தண்ணீரை விடவும். அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். புளி பச்சை வாசனை போக கொதித்தவுடன், அதில் அரைத்து வைத்துள்ளப் பொடியைத் தூவி கிளறி விடவும். தொக்கு போல் எல்லாம் சேர்ந்து வரும் பொழுது இறக்கி வைக்கவும்.

ஆறிய பின் ஒரு பாட்டில் அல்லது ஜாடியில் போட்டு வைக்கவும்.


தயிர் சாதத்துடன் சாபிட சுவையாக இருக்கும்.

ஞாயிறு, 17 மார்ச், 2013

வால்நட் எண்ணெயின் நன்மைகள்!!!

நட்ஸ் உடலுக்கு மட்டும் தான் ஆரோக்கியத்தை தரும் என்று நினைக்க வேண்டாம். நட்ஸ் சாப்பிட்டால், உடல் நலத்தை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். அதேசமயம், அதனை வைத்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை வைத்து சருமத்தை பராமரித்தால், சருமம் நன்கு பொலிவோடு அழகாக பட்டுப் போன்று இருக்கும். இதுவரை நட்ஸில் பாதாம் எண்ணெடியை வைத்து மட்டும் தான் சருமத்தை பராமரிப்பது பற்றி தெரியும். ஆனால் அந்த நட்ஸில் ஒன்றான வால்நட்டை வைத்து தயாரிக்கப்பட்ட எண்ணெயில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளன.
இத்தகைய எண்ணெயில் வைட்டமின், புரோட்டீன் போன்றவை அதிகம் இருப்பதால், அது சருமத்தில் ஒரு பெரிய அதிசயத்தை உண்டாக்கும். மேலும் இதில் நார்ச்சத்து, ஒமேகா-3 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், இந்த எண்ணெயிலிருந்து ஒரு நல்ல பலனை நிச்சயம் பெறலாம். அத்தகைய பலன் என்னவென்று பார்ப்போமா!!!

சுருக்கங்கள்
வால்நட் எண்ணெயை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், அவை சருமத்தில் உள்ள சுருக்கங்களை முற்றிலும் நீக்கி, இளமையான தோற்றத்தைத் தரும்.
தொற்றுநோய்கள்
சருமத்தில் ஏதேனும் பூஞ்சைகள் தாக்கி, அதனால் தொற்றுநோய்கள் ஏற்பட்டிருந்தால், அவற்றை போக்குவதற்கு வால்நட் எண்ணெய் சிறந்ததாக உள்ளது. அதற்கு வால்நட் எண்ணெயை ஏதேனும் மூலிகை எண்ணெயையுடன் சேர்த்து கலந்து, சருமத்தில் உள்ள பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால், ஒரு நல்ல பலன் கிடைக்கும்.
தோல் அழற்சி
சருமத்தில் தடிப்புகளுடன், சிவப்பு நிறத்தில் அழற்சி போன்று இருந்தால், அவற்றை சரிசெய்ய வால்நட் எண்ணெயைப் பயன்படுத்தலாம். அதிலும் இந்த எண்ணெயை குளிக்கும் நீரில் சிறிது சேர்த்து குளித்து வந்தால், சருமத்தில் ஏற்படும் அழற்சியை சரிசெய்துவிடலாம்.
உடல் நோய்கள்
வால்நட் எண்ணெயில் ஒரு நல்ல பொருளான ஒமேகா-3 உள்ளது. இந்த ஒமேகா-3 சத்தானது, நிறைய உடல் நல நன்மைகளை உள்ளடக்கியது. அதிலும் குறிப்பாக இதய நோய், சில வகையான புற்றுநோய்கள் மற்றும் அழற்சி குறைபாடுகளான சொறி, படை, சிரங்கு போன்றவற்றை குணமாக்க வல்லது.

புதன், 20 பிப்ரவரி, 2013

மக்காச்சோளம் சாலட்


மக்காச்சோளம் 
தக்காளி 
மக்காச்சோளம் சாலட்

தேவையான பொருள்கள்:
மக்காச்சோளம் = 2 கப்
தக்காளி = 1
வெங்காயம் = 1
மிளகுத்தூள் = 2 ஸ்பூன்
எலுமிச்சை பழச்சாறு = 1 ஸ்பூன்
கொத்தமல்லி இலை = சிறிதளவு
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
தக்காளி மற்றும் வெங்காயத்தை சிறிதாக நறுக்கி கொள்ளவும். மக்காச்சோளத்தை பாதி அளவு வேக வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, வெங்காயம் மற்றும் வேக வைத்த சோளம் ஆகியவற்றை போட்டு அதனுடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து கிளறி விட்டு எலுமிச்சை பழச்சாறு மற்றும் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். உடலுக்கு ஆரோக்கியமான, சத்து நிறைந்த “மக்காச்சோளம் சாலட்” தயார்.
மருத்துவ குணங்கள்:
மக்காச்சோளத்தில் குளோரைடு, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சோடியம், கோபால்ட், குரோமியம், காப்பர், புளூரின், இரும்பு, அயோடின், மாங்கனீசு, செலினியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை காணப்படுகிறது. மேலும் வைட்டமின் “ஏ”, வைட்டமின் “பி”, வைட்டமின் “சி”, வைட்டமின் “டி”, வைட்டமின் “கே” வைட்டமின் “பி6″, வைட்டமின் “பி12″ மற்றும் ஃபோலிக் அமிலம் காணப்படுகிறது. சிறுநீரக கோளாறுகள் அனைத்தையும் குறைக்கும் சக்தி வாய்ந்தது. உடல் பருமன், மூலநோய் மற்றும் நீரிழிவை குறைக்கும். இவ்வாறு மருத்துவ குணங்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியாக நோயின்றி வாழ்வோம்.

ரத்த அணுக்களை அதிகரிக்கும் கிஸ்மிஸ்பழம்

செடியில்  இருந்து பசுமையாக பறித்த பழங்களை உண்பதில் உள்ள சத்துக்களைப் போல உலர் பழங்களை உண்பதிலும் அதிக ருசியும் சத்துக்களும் காணப்படுகின்றன. நாம் உணவில் ருசிக்காக சேர்த்துக்கொள்ளும் உலர் திராட்சையானது கிஸ்மிஸ்பழம் என்று அழைக்கப்படுகிறது.
உலர் திராட்சை பழத்தில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.
திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர். இந்த உலர் பழங்களை வெகுதூர தேசங்களுக்கு அனுப்பினாலும் வெகு நாட்கள் வரை கெடாது. அப்படியே இருக்கும். திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. பச்சை திராட்சைப் பழத்தை விட இதற்கு உஷ்ணசக்தி அதிகம். பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும்.
அடங்கியுள்ள சத்துக்கள்:
உலர் திராட்சைப் பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன. வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.
ரத்தசோகையை கட்டுப்படுத்தும்:
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும். தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
காமாலை நோய் குணமடையும்:
மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர்திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும். உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு போட்டு காய்ச்சி ஆறவைத்து பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் சரியாகும்.
உடல்புஷ்டிக்கு:
இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
குழந்தைக்கு பால்காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும்.
தொண்டைக்கம்மல் இருந்தால் இரவு படுக்கும்முன் 20 பழங்களை சுத்தம்செய்து பழங்களை சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கல்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் தொண்டைக் கம்மல் குணமடையும்.
மூலநோய் உள்ளவர்கள் தினசரி உணவிற்குப்பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை ஏழுநாட்கள் சாப்பிட்டுவந்தால் மூலரோகம் குணமடையும்.
பெண்கள் நோய் தீரும்:
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீ­ரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். மாதவிலக்கு சமயத்தில் வயிறு, மார்பு, விலா, முதுகுப் பக்கங்களில் வலி ஏற்படும். இதை நிறுத்த 20 பழங்களை எடுத்து ஒரு சட்டியில் போட்டு ஆழாக்கு தண்ணீ­ரில் தேக்கரண்டியளவு சோம்பு சேர்த்து கசாயம் செய்து மூன்று நாட்களுக்கு இருவேளை சாப்பிட்டு வந்தால் வலி குணமடையும்.

பித்தத்திலிருந்து விடுதலை பெற....!

விருப்பமான உணவுகள், மசாலா உணவுகள் பேன்றவற்றைப் பார்த்தால் சாப்பிடலாமா, வேண்டாமா என்ற அச்சம். அதிகம் சாப்பிடலமா சாப்பிட்டால் ஜீரணமாகுமா நெஞ்சு கறிக்குமா எதுக்கிக்கெண்டே இருக்குமா இதுபேன்ற கேள்விகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக விளங்குவது பித்தம். இந்த பித்தம் தெடர்பான பிரச்சினைகளையும், அதனை பேக்கும் எளிய இயற்கை மருத்துவ முறைகளையும் இப்போது பார்ப்பேம்...
* இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.
* இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.
* பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
* எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.
* ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.
* பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.
* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.
* அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.
* பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.
* கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.
* நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.
* எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.
* அரச குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.


வியாழன், 14 பிப்ரவரி, 2013

பருமன் பயமுறுத்துகிறதா ?

கொழுப்புகள் கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அளவுக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேர்வதால் உடல்பருமன் ஏற்படுகிறது.
கூடுதல் உடல் பருமனுக்கான காரணங்கள்:
அதிக அளவு உணவு எடுத்துக்கொள்ளல், குறைவான சக்தியைச் செலவிடல், அதிக சக்தி தரும் உணவுகளை உட்கொள்ளல் (இனிப்புகள்/ ஐஸ்-கீரிம்/ குளிர்பானங்கள்), மதுப் பழக்கம் போன்றவற்றால் கூடுதல் பருமன் ஏற்படுகிறது.
வயது மற்றும் பரம்பரைக் காரணிகளும் கூட உடல்பருமனுக்குக் காரணங்களாகும். தைராய்டு சுரப்புக் குறைவதாலும், அட்ரீனல் சுரப்பு அதிகரிப்பதாலும் உடல் பருமன் அதிகரிக்கும். கூடுதல் உடல்பருமனால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டு வாதம், மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன.
உடல்பருமனுக்கு எளிய சித்த மருத்துவம்:
இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு டேபிள் ஸ்பூன் சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol), ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.
கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.
சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.
பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.
எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள் ஸ்பூனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.
சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:
தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.
நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்:
இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள். தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்.

திங்கள், 21 ஜனவரி, 2013

சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சி செய்தால் இதயத்துக்கு நல்லது !!!

அதிக கொழுப்பு சத்துமிக்க உணவு வகைகளை சாப்பிடுவதன் மூலம் உடல் நலத்துக்கு கேடு ஏற்படும். இதயம் பாதிக்கப்படும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் அவற்றை சீரமைக்க சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சி செய்வது அவசியம் என தெரிய வந்துள்ளது. இது குறித்து ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
கொழுப்பு சத்துமிக்க உணவு பொருட்களை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் டிரைகிளை செரிட்ஸ் மற்றும் கொழுப்பு சத்துகள் அதிகரிக்கின்றன. அதுவே இதய நோய்கள் உள்ளிட்ட பல்வேறு உடல் நலக்கோளாறுகள் ஏற்பட வழி வகுக்கின்றன.
எனவே சாப்பிட்டவுடன் சுமார் ஒரு மணி நேரம் நடப்பது, போன்ற உடற்பயிற்சி செய்வதன் மூலம் ரத்தத்தில் ஏற்படும் கொழுப்பு, டிரைகிளை செரிட்ஸ் அளவு குறைகிறது. இதன் மூலம் இதயம் பாதிப்பில் இருந்து தடுக்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.